search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணை பிரியாத தம்பதி"

    முத்துப்பேட்டை அருகே கணவர்-மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் ஆலங்காடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு அய்ரக்கண்ணி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது74). இவர் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜேஸ்வரி(65). இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி, சந்திரா, புனிதா, நாராயணசாமி, சந்திரசேகரன் ஆகிய 5 மகன், மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவியான சுப்பிரமணியன்-ராஜேஸ்வரி இணை பிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். எங்கும் சென்றாலும் ஜோடியாகவே செல்வர்.

    இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணியன் நேற்று காலை திடீரென அவர் இறந்தார். இந்நிலையில் கணவர் சுப்பிரமணியன் இறந்ததை அறிந்த ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்த அங்கேயே மயங்கி விழுந்தார். இதைகண்ட உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முத்துப் பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ராஜேஸ்வரி உடலையும் வீட்டுக்கு கொண்டு வந்து கணவன் மனைவி இருவரது உடல்களையும் அருகருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    கணவர்-மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் ஆலங்காடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்தார்.
    பத்மநாபபுரம்:

    குமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே கருப்புகோடு பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பல பிள்ளை (வயது 96). இவருடைய மனைவி தாணுபாய் (86). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    மூத்த மகன் வீட்டில் பொன்னம்பலபிள்ளையும், தாணுபாயும் வசித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தாணுபாய் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். மேலும் முதுமையும் அவரை வாட்டியது. அப்போது அருகில் இருந்தபடி பொன்னம்பலபிள்ளை அவரை கவனித்து வந்தார். அந்த சமயத்தில், நீ இறந்து விட்டால், நானும் உன்னோடு வந்து விடுவேன் என்று பொன்னம்பலபிள்ளை தன்னுடைய மனைவியுடன் கூறி வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலையில் தாணுபாய் திடீரென இறந்தார். மனைவி இறந்த அதிர்ச்சி செய்தியை கேட்டதும் பொன்னம்பலபிள்ளையும் நிலைகுலைந்து போனார். சிறிது நேரத்தில் அவரும் பரிதாபமாக இறந்தார். வாழும் போது சந்தோசமாக இருந்த தம்பதி, சாவிலும் இணை பிரியாமல் சென்று விட்டனர் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.
    ×